Friday, December 10, 2010

kavalan music review

எப்படிப்பட்ட படம் வந்தாலும், விஜயின் படம் மற்றும் பாடல்களுக்கு கிடைக்கும் வரவேற்பு அதிகம். அதேபோல் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விஜய் படப்பாடல்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவமும் அதிகம். காவலன் திரைப்படம் இதே எதிர்பார்ப்புடன் வெளியாகிறது.மெலடி பாடல்களுக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. வித்தியாசகர் மற்றும் விஜய் கூட்டணி இணைந்துள்ளது. வித்தியாசாகருக்கு இப்படம் ஒரு திருப்புமுனையாக அமையும்.

1) விண்ணைக்காப்பான் – திப்பு,& ஸ்வேதா (பாடல் – பா.விஜய்)

"விண்ணைக் காப்பான் ஒருவன்.. மண்ணைக் காப்பான் ஒருவன்
உன்னை என்னை காக்கும் அவனே அவனே இறைவன்"

ஓபனிங் பாடலை பா. விஜய் எழுதியுள்ளார்.திப்பு நீண்ட  நாட்களுக்கு பிறகு பாடியுள்ளர். படத்தின் முதல் பாடல் கடவுளை போற்றி தொடங்குகிறது. இந்த பாடலுக்கு ட்ரம்ப்பெட் பயன்படுத்தப்பட்டுள்ளது. கில்லி படத்தின் பாடல்கள் நம்மை மிகவும் குஷிப்படுத்தி ஆட வைத்தது போல், இப்பட பாடல்களையும் வித்தியாசகர் அமைத்துள்ளார்.  விஜயே பாடும்படி இப்பாடல் வரிகள் எழுதப்பட்டுள்ளன.

2) யாரது.. யாரது – கார்த்திக் & சுசித்ரா ( யுகபாரதி)


வித்தியாசகர் பாடல் என்றால் ஒரு தனி எதிர்பார்ப்பு தான். அதுவும் அவருடைய மெலடி பாடல் என்றால், சொல்லவா வேண்டும். அப்படித்தான் அமைந்துள்ளது இப்பாடல். கார்த்திக்கும் சுசித்ராவும் பாடியுள்ளனர். கார்த்திக் பாட சுசித்ரா ஹலோ ஹம்மிங் மட்டும் கொடுத்துள்ளார்.இப்பாடல் கேட்பதற்கும் இதமாக உள்ளது. இப்பாடலின் மூலம் மனதை பித்து பிடிக்க வைக்கிறார் வித்தியாசகர். கேட்பதற்கு இதமாக உள்ள இப்பாடலை, பார்ப்பதற்கும் இதமான பாடலாக சித்திக் படமாக்குவார் என நம்பலாம். மெலடி ரசிகர்களின் எதிர்பார்ப்பை இப்பாடல் நிறைவேற்றுகிறது.


3) ஸ்டெப் ஸ்டெப் – பென்னி தயாள் & மேகா (விவேகா)


ஏர்டெல் வாடிக்கையாளர்கள் எல்லோருமே காலர் ட்யூனாக வைத்திருக்கிரார்கள். கேட்ட உடனே மனதை விட்டு நீங்காமல் கம் போல ஒட்டிக் கொள்கிறது. இப்பாடலை கேட்பவர்கள் யாரும் விஜய் மற்றும் வித்தியாசகர் பாடல் என்றே சொல்லமாட்டார்கள். பேஸ், எலக்ட்ரிக் கிட்டார், இவற்றை பயன்படுத்தியுள்ளார் வித்தியாசகர். விவேகா கந்தசாமி இப்பாடலை எழுதியுள்ளார். கொஞ்சமாக பாடல் வரிகள் தளபதி விஜய் பற்றி இருந்தாலும், மற்ற வரிகள் மூடுக்கும் , மெட்டுக்கும்  கரெட்டாக பொருந்துகிறது.
நடன கலைஞர்களின் தேர்வாக இப்பாடல் அமையும்.

"பார்க்கதான் சிறுபுள்ள..கலக்குற பயபுள்ள..
இளம்பெண்கள் நினைப்பால நீதான் மாப்பிள்ளை


ஏமாந்த ஆளில்லை..நான் உன்னை போலில்லை.
என்ஆட்டம் பாரேண்டி யாரும் இணையில்லை"

4) சடசட சடசட – கார்த்திக் (பாடல்- யுகபாரதி)

கார்த்திக் இப்பாடலை பாடியுள்ளார். ஒவ்வொரு பாடலின் இருதியிலும் மிகவும் சந்தோஷப்பட வைக்கிறார் யுகபாரதி. பல்லவி முடிந்த பின் வரும் கிட்டார் இசை,  இப்படியெல்லாம் வாசிக்க  முடியுமா என்று ஆச்சரியப்படுத்துகிறது.

"கங்கைநதி வெள்ளம் சிறுசங்குக்குள்ளே சிக்கிக்கொண்டு அக்கரைக்கு செல்ல எண்ணுதே
சின்னஞ்சிறுபிள்ளை ஒரு சொப்பனத்தை வைத்துக்கொண்டு கண்ணுறக்கம் கேட்டுநிக்குதே"


5) பட்டாம்பூச்சி – கே.கே. & ரீட்டா (கபிலன்)

ஹாயாக அமர்ந்து தாளம் போட்டு கேட்க கூடிய பாடலாக அமைந்துள்ளது. விஜயின் நக்கலும் அசினின் சிணுங்கலும் ரசிக்கும் படியாக உள்ளது. அதற்கு தகுந்த படி கே.கே மற்றும் ரீட்டா செல்லமாய் சிணுங்கி பாடியுள்ளார்கள். கபிலன் இப்பாடலை எழுதியுள்ளார்.எஃப்.எம்களின் தேர்வாக அமைந்துள்ளது.

"அலைவரிசையில் நீ சிரிக்க.. தொலை தொடர்பினில் நான் இருக்க..
உதடும் உதடும் பேசும்பொழுது உலகை மறந்தேனே"

No comments:

Post a Comment